மகள் செளந்தர்யாவுக்காக ரஜினி-லதா கொடுத்த விதைப்பரிசு

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா-விசாகன் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ரஜினி-லதா தம்பதிகள் சார்பில் விதைப்பந்து அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது. தாம்பூல பைக்கு பதிலாக ரஜினி கொடுத்த விதைப்பரிசை பார்த்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி அடைந்தனர்.