'பொன்னியின் செல்வன்' நாடகத்தில் கமல்-ரஜினி-அஜித்-விஜய் உண்டா?

  • IndiaGlitz, [Sunday,August 21 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வரப்படும் நிலையில் நடிகர் சங்கத்திற்கு என புதிய கட்டிடம் கட்டும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக நட்சத்திர கிரிக்கெட், விஷால்-கார்த்தி திரைப்படம் உள்பட பல்வேறு வழிகளில் நிதிதிரட்டி வரும் நிலையில் விரைவில் 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை நாடகமாக்க உள்ளனர். இந்த நாடகத்தில் கமல், ரஜினி, அஜித் விஜய் நடிப்பார்களா? என்ற கேள்விக்கு நடிகர் சங்க செயலாளர் விஷால் பதிலளித்துள்ளார். அந்த பதில் இதோ:
'பொன்னியின் செல்வன் நாடகத்தில் கமல் சார் நிச்சயமா இருப்பார். நானே அதை உறுதியா சொல்வேன். அவர் எங்களுக்கு ஒரு தூண் மாதிரி பக்கபலமா இருக்கர். நாங்க ஜெயிச்சதும் ரஜினி சார் போன் பண்ணி வாழ்த்தினார். சி.சி.எல் கிரிக்கெட் மேட்சுக்கு கூப்பிட்டதும் வந்தார். ஆனா, இந்த நாடகத்துல அவர் இருப்பாரானு தெரியலை. விஜய்கிட்ட ஸ்டார் கிரிக்கெட் ஃபங்க்ஷனுக்குக் கூப்பிடுறதுக்கக கேட்டேன். 'விருப்பம் இல்லை'னு சொன்னார். அஜித் வாய்ப்பே இல்லை. நாங்க கேட்கவும் மாட்டோம். ஆனா, ஒவ்வொருவரின் முடிவை நாம் மதிச்சே ஆகணும். சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. அவங்களுக்கு பிடிக்கலைங்கிறதால நாம குறை சொல்ல முடியாது. அது அவர்களின் உரிமை

More News

சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தாவுக்கு என்ன கேரக்டர்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வெற்றி படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி இணையவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

நட்டி நட்ராஜின் 'போங்கு' டீசர்

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய நட்டி என்ற நட்ராஜ் ஏற்கனவே 'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்'...

'பாகுபலி 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது அனைவரும் அறிந்ததே...

விஜய்சேதுபதியின் தர்மதுரை முதல் நாள் வசூல் நிலவரம்

சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி என ஏற்கனவே இந்த ஆண்டு ஹாட்ரிக் படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி ...

உலக நாயகனின் உடல்நிலை குறித்த தகவல்

சமீபத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த உலக நாயகன் கமல்ஹாசன் ஒருசில வாரங்கள் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர்...