ரஜினியை அடுத்து பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த கமல்
- IndiaGlitz, [Wednesday,November 09 2016]
நேற்று பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 வாபஸ் என்ற அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கலந்து கிடைத்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்தார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.
இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், ' 'பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு தலைவணங்குகிறேன். ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
கமல், ரஜினி மட்டுமின்றி பெரும்பாலான கோலிவுட் விஐபிக்கள் பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.