44 வயதில் தொழிலதிபருடன் திருமணம்: ரஜினி, கமல் பட நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Tuesday,March 21 2023]

ரஜினி, கமல், சரத்குமார் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் 44 வயதில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’படையப்பா’ கமல்ஹாசன் நடித்த ’தெனாலி’ சரத்குமார் நடித்த ’சூரிய வம்சம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா. இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்தார் என்பதும் குறிப்பாக ’அருவி’ என்ற சீரியலில் லட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 44 வயதான இவர் பிரசன்னா என்ற தொழில் அதிபரை சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ’அருவி’ சீரியல் குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.