முதல்வரின் விழாவில் கலந்து கொள்ள ரஜினி-கமலுக்கு அழைப்பு!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விழா ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ’உங்களில் ஒருவன்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த புத்தகம் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அழைப்பிதழை முக்கிய பிரபலங்களை நேரில் சந்தித்து பூச்சி முருகன் வழங்கி வருகிறார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக முதல்வரின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.