கமல், ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா? கவுதமி கருத்து

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

இன்று உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து நடிகை கவுதமி சற்று முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் கவுதமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மைதான். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது' என்று கூறினார்.

முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்., மகளே என்று தொடங்கும் பெண்ணின் பெருமையை கூறும் இந்த பாடலில் கவுதமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிறையில் சசிகலாவுக்கு சலுகை தரச்சொன்னது யார்? டிஜிபி அதிர்ச்சி தகவல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

பெரியார் சிலை பிரச்சனை: கருத்தில் முரண்பட்ட கமல்-ரஜினி

பெரியார் சிலை குறித்து கருத்தை பதிவு செய்த எச்.ராஜா, அதன் பின்னர் அந்த கருத்து தன்னுடைய கவனத்திற்கு வராமல் அட்மின் பதிவு செய்த கருத்து என்றும், அதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

பெரியார் சிலை விவகாரம்: குரல் கொடுத்தார் ரஜினி

கடந்த இரண்டு நாட்களாக பெரியார் சிலை விவகாரம் குறித்து தமிழகமே பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றன.

அம்பிகா, லிவிங்ஸ்டன் வாரிசுகள் இணையும் புதிய தமிழ்ப்படம்

நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'கலாசல்' என்ற படத்தின் நாயகியாக நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார்.

ஆய்வாளர் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பெண் மரணம். திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் நேற்றிரவு காவல்துறை ஆய்வாளர் காமராஜ் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்