ரஜினி, கமல், லோகேஷ் கனகராஜ் சந்திப்பு: அடுத்த படத்தில் இணைகிறார்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரும் சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மூவரும் ஒரு திரைப்படத்தில் இணைகிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’விக்ரம்’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த படத்தின் புரமோஷனுக்காக கமல்ஹாசன் சென்று வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்நிலையில் ’விக்ரம்’ படம் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான ரஜினிகாந்த்தை கமல்ஹாசன் சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
’விக்ரம்’ படத்தின் ரிலீசுக்கு முன்னால் தனது உயிர் நண்பரை கமல்ஹாசன் சந்தித்ததும் அவருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப் படம் இயக்குவதாக கூறப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்த நிலையில், ‘நிச்சயம் இந்த படம் எதிர்காலத்தில் உருவாகும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய சந்திப்பு அந்த நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you @ikamalhaasan Sir! @rajinikanth Sir! What a friendship! inspiring Love you Sir's❤️❤️❤️ pic.twitter.com/l61EuttG89
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments