ரஜினி, கமல், லோகேஷ் கனகராஜ் சந்திப்பு:  அடுத்த படத்தில் இணைகிறார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரும் சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மூவரும் ஒரு திரைப்படத்தில் இணைகிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’விக்ரம்’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த படத்தின் புரமோஷனுக்காக கமல்ஹாசன் சென்று வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் ’விக்ரம்’ படம் வெளியாக இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான ரஜினிகாந்த்தை கமல்ஹாசன் சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’விக்ரம்’ படத்தின் ரிலீசுக்கு முன்னால் தனது உயிர் நண்பரை கமல்ஹாசன் சந்தித்ததும் அவருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப் படம் இயக்குவதாக கூறப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்த நிலையில், ‘நிச்சயம் இந்த படம் எதிர்காலத்தில் உருவாகும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய சந்திப்பு அந்த நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

செல்வராகவன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

 பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானதை எடுத்து அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

''குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பார்த்தால் குழந்தை பிறக்கும்: வெங்கடேஷ் பட் கூறிய ஆச்சரிய தகவல்

 ''குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதால் மன அழுத்தம் குறைந்து தனக்கு குழந்தை பிறந்ததாக ஒரு பெண் கூறினார் என்று ''குக் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ்

பிரபல இயக்குனருடன் நெருக்கமான மீரா ஜாஸ்மின்: வைரல் புகைப்படம்!

பிரபல இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை மீரா ஜாஸ்மின் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நடிகைக்கு ஆண் குழந்தை: ரசிகர்களின் வாழ்த்துமழை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் இருந்து வெளியேறுகிறாரா பிரியங்கா: பாலா சொன்ன அட்வைஸ்

 விஜய் டிவியில் இருந்து தொகுப்பாளினி பிரியங்கா வெளியேற இருப்பதாக வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.