சசிகுமார் ஜோடியாக நடிக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் பட ஹீரோயின்.. அடுத்த 'குட் நைட்' படம்..!

  • IndiaGlitz, [Thursday,July 04 2024]

ரஜினிகாந்த் , கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார்,அஜித், விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை, சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்துடன் ’பேட்ட’, கமல்ஹாசனுடன் ’பஞ்சதந்திரம்’ உட்பட சில படங்கள், விஜயகாந்த் உடன் ’ரமணா’, சரத்குமாருடன் ‘அரசு’, விஜய்யுடன் ’துள்ளாத மனமும் துள்ளும்’ உட்பட சில படங்கள், அஜித் உடன் ’அவள் வருவாளா’ உள்ளிட்ட சில படங்கள், சூர்யாவுடன் ’வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட சில படங்கள் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை சிம்ரன். சமீபத்தில் இவர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படத்தில் அம்மன் பாடல் அம்மன் பாடலுக்கு நடனமாடினார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சிம்ரன் ஒப்பு கொண்டிருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ படத்தை தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது முழுக்க முழுக்க குடும்ப கதை என்றும் சென்டிமென்ட் அதிகம் உள்ள படம் என்றும் கூறப்படுகிறது.

சசிகுமார் நடித்த ’அயோத்தி’ ’கருடன்’ ஆகிய படங்கள் தொடர் வெற்றியை பெற்றுள்ள நிலையில் சிம்ரனுடன் நடிக்கும் இந்த படமும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா ஒர்க்அவுட் செய்வது? நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்..!

பிரபல நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கர்ப்பமாக இருக்கும் பெண் இப்படியா ஒர்க் அவுட் செய்வது என அட்வைஸ்

ஒரு ஜான் வயித்துக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.. ரம்யா பாண்டியன் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஒரு ஜான் வயித்துக்கு எவ்வளவு கஷ்டப்பட

சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் டைட்டில் இதுவா? மீண்டும் ரஜினி ரெஃப்ரன்ஸ்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

🙏சீரடி சாய் பாபாவின் பெருமைகள் மற்றும் அற்புத அனுபவங்கள் | ஆன்மீககிளிட்ஸ்

பிரபல ஆன்மீக யூடியூப் சேனலான ஆன்மீககிளிட்ஸில் ஆன்மீக அன்பர் சாய் S. பிரதீப் அவர்கள், சீரடி சாய் பாபா பற்றியும்,

'பாரதி கண்ணம்மா' நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை சன் டிவி பிரபலமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்த நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் அவரை திருமணம் செய்ய போவார் விஜய் சன் டிவி பிரபலம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.