ரஜினி-விஜய் படங்களின் வியாபாரம் தொடக்கம்?

  • IndiaGlitz, [Wednesday,November 04 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் என்றாலே வியாபாரம் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 17 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் 'படையப்பா' படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.3 கோடிக்கு விலைபோனது. தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் 'கபாலி' படத்தின் வெளிநாட்டு உரிமை 'படையப்பா' படத்தை விட பத்து மடங்கு அதாவது. ரூ.30கோடிக்கும் மேல் தயாரிப்பாளர் தாணு வியாபாரம் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் வெளியான ரஜினியின் 'லிங்கா' படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.26 கோடிக்கு விலைபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தாணு தயாரித்து வரும் மற்றொரு படமான 'விஜய் 59' படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.25 கோடிக்கு வியாபாரம் பேசிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஜய்யின் 'புலி' எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றாலும் விஜய்யின் அடுத்த படத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து கொண்டிருக்கும் தாணு, இந்த இரண்டு படங்களையும் மிக அதிக விலைக்கு விற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

More News

இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஏ.எம்.ரத்னம்

கமல், அஜீத், விஜய், சிரஞ்சீவி, பவண்கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்...

கமல்ஹாசன் படத்திற்கு சிங்கப்பூரில் ஏற்பட்ட சிக்கல்

உலக நாயகன் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

விஜய்க்கு ஜோடியாகும் நண்பனின் நாயகி?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

'நானும் ரெளடிதான்' கூட்டணியில் இணைந்த செல்வராகவன்?

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி-நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் எதிர்பாராத சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று தயாரிப்பாளருக்கும்...

கமலுடன் 27 வருடங்கள் கழித்து ஜோடி சேரும் பிரபல நடிகை

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் தீபாவளி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக...