ரசிகர்களுடன் சந்திப்பு: ரஜினி மன்ற தலைவர் முக்கிய அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கவுள்ளார். திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் உள்பட 17 மாவட்ட ரசிகர்களுக்கு முன்கூட்டியே அடையாள அட்டை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி சுதாகர், ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும்' என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com