ரஜினி ஒரு கோழை. சுப்பிரமணியன் சுவாமி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று நேரத்திற்கு முன்னர் தான் இலங்கை செல்வதாக திட்டமிட்டிருந்ததை ரத்து செய்வதாக அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்தார். திருமாவளவன், வைகோ, வேல்முருகன் போன்ற அரசியல் தலைவர்கள் தன்னை இலங்கை செல்ல வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொண்டதாகவும், அவர்கள் கூறும் காரணம் தனக்கு உடன்பாடு இல்லை எனினும் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டதால் தனது பயணத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்திருந்தார்
ரஜினியின் இந்த முடிவை சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார். அனைத்து சினிமா ஸ்டார்களும் கோழைகள் என்றும், ரஜினிகாந்த் மட்டும் அதில் வேறுபட்டவர் இல்லை என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் 'ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு எழுந்துள்ள எதிர்ப்பையும் மீறி பயப்படாமல் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டால் அவரை தாராளமாக பாராட்டலாம்' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Minal55352507 : All cinema stars are chicken. Rajnikant no different
— Subramanian Swamy (@Swamy39) March 25, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments