விரைவில் வெளியாகும் ரஜினி படத்தின் டிரைலர் இதோ!

  • IndiaGlitz, [Thursday,March 14 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன நிலையில் விரைவில் அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினியின் மெகா ஹிட் படங்களில் ஒன்றான 'தங்கமகன்' திரைப்படம் தற்போது டிஜிட்டலில் தயாராகியுள்ளது. சத்யா மூவீஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் வசூலில் சாதனை செய்தது. ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராமன், சில்க்ஸ்மிதா, ஜெய்சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தில் தயாராகியுள்ளது.

இதனையடுத்து இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'சத்யா மூவீஸ்' தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. இந்த படத்தை நவீன தொழில்நுட்பத்தில் திரையில் பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.