ரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஒளிபரப்பு எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
டிஸ்கவரி சேனல் தயாரித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார் என்றும் இந்த ஆவணபடத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்பட பல சர்வதேச பிரபலங்கள் நடித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தின் அடுத்த பாகத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வெளிவந்தது. இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. பேரி கிரில்ஸ் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த ஆவணப்படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த ஆவணப்படம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை உறுதி செய்வதை போல் இந்த ஆவணப்படத்தின் விளம்பரமும் தற்போது டிஸ்கவரி சேனலில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Preparing for @Rajinikanth’s blockbuster TV debut with an Into The Wild with Bear Grylls motion poster! I have worked with many stars around the world but this one for me was special. Love India. #ThalaivaOnDiscovery pic.twitter.com/kFnkiw71S6
— Bear Grylls (@BearGrylls) February 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments