'தர்பார்' படத்தின் அட்டகாசமான அப்டேட்! முருகதாஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 14 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கலன்று வெளியாக இருப்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் சமீபத்தில் தொடங்கியது

இந்த படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவை நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

’தர்பார்’ படத்தின் டிரைலர் வரும் 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். டிரைலர் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ’தர்பார்’ படத்தின் டிரைலர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினிகந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.