ரஜினியின் 'அண்ணாத்த' படத்துடன் மோதும் சிவகார்த்திகேயன் படம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படமும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை இயக்குனர் சிறுத்தை சிவா சுறுசுறுப்புடன் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அதே தீபாவளி நாளில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆனால் தீபாவளி அன்று சினிமா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு: நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டிரைலர்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியான நிலையில் இந்த டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சார்பாட்டா என்பது சாதி சண்டையா? உண்மையை விளக்கும்  பரம்பரை சண்டைக்காரன்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் மெட்ராஸ் பாக்சிங் வரலாற்றைக் கூறும் “சார்பாட்டா” திரைப்படம்

அந்த ஐந்து நாட்களுக்கு பின் 'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அந்த ஐந்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை

கமல் தலைமையில் நடந்த சினேகன்-கன்னிகா திருமணம்: வைரல் புகைப்படம்!

பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சினேகன் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்யப்போகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ் குறித்த சர்ச்சை: பிரபல இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட அல்போன்ஸ் புத்திரன்!

தமிழ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது