ரஜினி-ஷங்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Sunday,March 04 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசர் பணிகள் முடியுந்தருவாயில் உள்ளதாகவும் மிக விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் ஒரு அதிர்ச்சி செய்தியாக இணையதளங்களில் இந்த படத்தின் டீசர் லீக் ஆகியுள்ளது இது ரஜினி மற்றும் ஷங்கருக்கு மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரையும் அதிர வைத்துள்ளது. பல மாதங்கள் இரவு, பகல் என தூக்கமின்றி படக்குழுவினர் உழைத்து உருவாக்கிய படத்தின் வீடியோ லீக் ஆகியுள்ளது என்பதை படக்குழுவினர்களால் நம்பவே முடியவில்லை

பல்வேறு கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இந்த டீசர் லீக் ஆனது குறித்து விசாரணை நடத்தவும், சைபர் க்ரைம் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கவும் படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டீசர் லீக் ஆனதை தொடர்ந்து விரைவில் அதிகாரபூர்வமாக ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.