மேக்கிங் ஆஃப் '2.0' விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி சற்றுமுன்னர் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 25 இடங்களில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2150 கிராபிக்ஸ் ஷாட்கள் இந்த படத்தில் இருப்பதாகவும், 1000 கிராபிக்ஸ் நிபுணர்கள் இந்த படத்திற்காக பணிபுரிந்து வருவதாகவும் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 3D கேமிராவில் படமாக்கப்பட்ட, V-கேம் டெக்னால்ஜியிலும், ஸ்பைடர்கேம் சிஸ்டத்திலும், லிடார் ஸ்கேனிங் பயன்படுத்தப்பட்டும் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் 10 கான்செப்ட் கலைஞர்கள், 25 3D டிசைனர்கள், 500 கிராப்ட்ஸ்மேன்கள் இந்த படத்திற்காக இரவுபகலாக உழைத்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற கிராபிக்ஸ் கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவில் ஸ்டைலான ரஜினிகாந்த், ஆக்ரோஷமான அக்சயகுமார், எமிஜாக்சன் மற்றும் ஒருசில கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் உள்ளது. ஒரு நிமிடம் 40 வினாடிகள் உள்ள இந்த வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதுவரை ஹாலிவுட்டுக்கு நிகராக, இணையாக என்று கூறி வந்தோம், இந்த படம் 'அதுக்கும் மேல' என்று கூறினால் மிகையாகாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments