மீண்டும் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் '2.0'

  • IndiaGlitz, [Monday,June 03 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான '2.0' திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய சாதனை வசூல் செய்தது

இந்த நிலையில் இந்த படம் சீனாவில் வெளியாகவிருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன மொழியிலும், ஆங்கில சப் டைட்டிலும் '2.0' திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி சீனாவில் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பாலிவுட் பதிப்பின் டைட்டிலான 'ரோபோட் 2.0' என்ற டைட்டிலில்தான் சீனாவிலும் வெளியாகவிருப்பதாக இந்த படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யும் எச்.ஒய் நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ஏற்கனவே ரூ.800 கோடி வசூல் செய்த நிலையில், சீன வசூலையும் சேர்த்தால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

திருமணமான பெண்களை குறிவைத்து 50 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்!

சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்களை குறிவைத்து அவர்களது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி 50 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது நான்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அழகிய தீர்வு: மத்திய அரசின் மாற்று முடிவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு!

இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்தியை பயிற்றுவிக்க புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

பிறந்த நாளில் இசைஞானி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதுதான்!

இளையராஜா நேற்று தனது 76வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். கமல்ஹாசன் உள்பட பல பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

இந்தி எதிர்ப்பை புத்திசாலித்தனமான புரமோஷனில் காட்டிய 'கொரில்லா' படக்குழு

தேர்தல் முடிந்துவிட்டதால் அரசியல்வாதிகளுக்கு போராட்டம் செய்யவும், அறிக்கை விடவும் காரணம் இன்றி தவித்த நிலையில் அவர்களுக்கு கைகொடுத்த விவகாரம் தான்