close
Choose your channels

சிங்கம் போல கர்ஜித்தார் ரஜினி. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த '2.0' தயாரிப்பாளர்

Thursday, June 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ஜூலையில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான '2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வருகிறார். ஆனால் திடீரென கடந்த வாரம் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வதந்தி கிளம்பியது. இதற்கு ரஜினி குடும்பத்தினர்களிடம் இருந்து விளக்கம் வந்தபோதிலும் அந்த வதந்தி முழுமையாக நீங்கவில்லை.
இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தலைவர் ராஜூ மகாலிங்கம் ரஜினியின் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னிடம் பேசினார். அவரது குரல் சிங்கம் கர்ஜிப்பது போல இருந்தது.அவரது உடல்நிலை குறித்த வதந்திக்கு இதுவே முற்றுப்புள்ளி. மகிழ்ச்சி என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் ஜூலை 3ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளதாகவும் அதன்பின்னர் 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment