'பேட்ட' டிரைலரில் ரஜினியின் முதல் பட அறிமுக காட்சி

  • IndiaGlitz, [Friday,December 28 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1975ஆம் ஆண்டு வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் தான் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் அறிமுககாட்சியில் அவர் கேட் ஒன்றை திறப்பது போன்ற காட்சி இருக்கும்

இந்த நிலையில் இதேபோன்ற ஒரு காட்சி சற்றுமுன் வெளியாகிய 'பேட்ட' படத்தின் டிரைலரிலும் உள்ளது. இந்த படத்தின் பல காட்சிகள் பழைய ரஜினியை காண்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறிய நிலையில் அவர் அறிமுகமான முதல் காட்சியையும் வைத்து ரசிகர்களை நெகிழ வைத்துவிட்டதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒரு ரசிகர் என்ற கோணத்தில் எடுத்துள்ளதால் நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி ரசிகர்களுக்கான ஒரு முழு திரைப்படமாக 'பேட்ட' இருக்கும் என கருதப்படுகிறது