தலைவா... வா...வா: ரஜினி வீட்டின் தர்ணா போராட்டம் நடத்திய ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,December 29 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 31ஆம் தேதி அரசியல் வருகையை அறிவித்துவிட்டு ஜனவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கி வரும் மே மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் இன்று மதியம் திடீரென ரஜினி வெளியிட்ட அறிக்கையில் தான் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம் எப்பொழுதும்போல் ரசிகர் மன்றமாக செயல்படும் என்றும் மிகுந்த மன வலியுடன் இந்த முடிவை அறிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்

ரஜினியின் இந்த முடிவு கடந்த மூன்று ஆண்டுகளாக அரசியல் தளம் அமைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு தரையில் அமர்ந்து ரசிகர்கள் தலைவா... வா...வா என்று கோஷமிட்டு திடீர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது