பெரியாருடன் ரஜினியை ஒப்பிட்ட ரசிகர்கள்: மதுரையில் மீண்டும் போஸ்டர் கலாச்சாரம்!

கடந்த சில நாட்களாக தளபதி விஜய்யை எம்ஜிஆருடன் உருவகப்படுத்தி விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக மதுரை விஜய் ரசிகர்கள் எம்ஜிஆரின் விதவிதமான சினிமா போஸ்டர்களில் எம்ஜிஆருக்கு பதில் விஜய்யை உருவகப்படுத்தி ஒட்டிய போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அடுத்ததாக தற்போது பெரியாருடன் ரஜினியை ஓப்பிட்டு ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் ’ஆன்மிகப் பெரியோரின் ஆட்சி மலரட்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்தில் குதித்தார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது ரசிகர்கள் சுறுசுறுப்பாக ரஜினி குறித்த போஸ்டர்களை கடந்த சில நாட்களாக ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி கேட்டுக்கொண்ட போதிலும் மதுரையில் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது:

கடவுள் நிந்தனை ஒழியட்டும்
ஆன்மீக ஆட்சி மலரட்டும்
ஆன்மிகப் பெரியாரின் ஆட்சி மலரட்டும்
அரசியல் மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை

ஆகிய வாசகங்கள் உள்ளதா என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியாருடன் ரஜினியை ஒப்பிட்டதற்கு பெரியாரின் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.