ரஜினியின் அரசியல் முடிவு: அதிர்ச்சியில் ரசிகர் மாரடைப்பால் மரணம்

  • IndiaGlitz, [Friday,March 13 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தான் முதல்வர் பதவியை ஏற்கபோவதில்லை என்றும், கட்சிக்கு மட்டும் தலைமை வகித்து வழிகாட்டியாக இருக்க போவதாகவும் அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சியை அடுத்த மணப்பாறை என்ற பகுதியை சேர்ந்த பாபா முருகேசன் என்பவர் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றம் துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். ரஜினியின் தீவிரமான ரசிகரான இவர், ரஜினியின் அரசியல் வருகை குறித்த நேற்றைய பேட்டியை தனது செல்போனில் நேரலையில் பார்த்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் பேச்சில் முதல்வர் பதவி குறித்து எடுத்த முடிவால் அதிர்ச்சி அடைந்த பாபா முருகேஷ் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி ரஜினி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்,.

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விபத்து ஒன்றில் சிக்கி பாபா முருகேசன் சிகிச்சை எடுத்து கொண்டு வந்ததாகவும், இந்த நிலையில் தான் ரஜினியின் முடிவை அறிந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

பாபா முருகேசன் தன் வாழ்நாள் ஆசையாக ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்ததாகவும், ஆனால் கடைசி வரை அவருடைய ஆசை நிறைவேறாமல் போய்விட்டதாகவும் அவரது நண்பர்கள் வருத்தத்துடன் கூறினர்.

More News

இது வேறயா???? கொரோனாவுக்கு மத்தியில் நைஜீரியாவில் பரவிவரும் லாசா காய்ச்சல்!!!

ஆப்பிரிக்க நாடானா நைஜீரியாவில் கொரோனாவை விட அதிக பாதிப்பு கொண்ட லாசா காய்ச்சல் வைரஸ் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்

ஆச்சரியத்தை வரவழைக்கும் சம்யுக்தா வர்மாவின் யோகா ஸ்டில்ஸ்

சரத்குமார், நெப்போலியன் நடித்த 'தென்காசி பட்டணம்' என்ற தமிழ் படத்திலும் ஒருசில மலையாள படத்திலும் நடித்த நடிகை சம்யுக்தா வர்மா, கடந்த 2002ஆம் ஆண்டு மலையாள நடிகர் பிஜூமேனன்

ரஜினிகாந்த் அரசியலை புரிந்து கொள்ள இன்றைய அரசியல்வாதிகளுக்கு தகுதியில்லை: பொன்ராஜ்

அரசியலுக்கு வரும் நடிகர்கள் உட்பட அனைவரும் முதல்வர் கனவுடன் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் பதவியை தன்னைத் தேடிவந்த நிலையிலும் அதனை வேண்டாம்

முதல் ஆளா நீங்கதான் களத்தில நிக்கணும், பயப்படாம வாங்க: ரஜினிக்கு கஸ்தூரி அழைப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த கருத்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட தான்

கனடா பிரதமரின் மனைவியையும் விட்டு வைக்காத கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதையும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முக்கிய விவிஐபிக்களையும் விட்டுவைக்கவில்லை என்பது ஏற்கனவே தெரிந்ததே.