காவல்துறைக்கு ரஜினி தரப்பில் எழுதிய முக்கிய கடிதம்!

  • IndiaGlitz, [Sunday,November 29 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்பதும் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே மக்களிடையே எழுச்சி வர வேண்டும் என்றும், அவ்வாறு எழுச்சி வந்த பின்னரே அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் நாளை என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை ஆவலுடன் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டை விட்டு வெளியே அதிகம் வராமல் இருந்த ரஜினிகாந்த் தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நாளை வர இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ராகவேந்திரா மண்டபத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் சார்பில் காவல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி வெளியே வருவதால் அவரை பார்க்க ரசிகர்கள் அதிகம் குவிய வாய்ப்பு இருப்பதால் காவல்துறையினர் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது