close
Choose your channels

ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு சென்ற ரஜினி மகள்: உருக்கமான பதிவு!

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோ சென்று வந்ததன் மலரும் நினைவுகள் குறித்த ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இன்று பல வருடங்களுக்குப் பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவைப் பார்வையிட சென்றேன். அங்கு நான் ஒரு மாடிக்குள் நுழைந்தபோது ஏக்கம் என்னுள் ஊர்ந்து சென்றது. இங்கு தான் எனது தந்தையின் பல படங்களின் படப்பிடிப்புகளும், என் கணவரின் ஒருசில படங்களின் படப்பிடிப்பும் நடந்தது

இந்த சுற்றுச்சூழல் என்னை எங்கேயோ கொண்டு சென்றது. அந்த இடம் எனக்கு என்றென்றும் சுமந்து செல்லும் விலைமதிப்பற்ற நினைவுகளைத் தந்துள்ளது. குறிப்பாக ஏவிஎம் நுழைவாயிலில் உள்ள பூமி உருண்டை பழைய மெட்ராஸை எனக்குத் திருப்பி தந்தது. நான் இந்த ஊரில் இருக்கின்றேன் என்பதில் எனக்கு பெருமை’ என்று கூறியுள்ளார்.

ரஜினி உள்பட பல நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்ற ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் சென்று வந்தது குறித்த புகைப்படத்துடன் கூடிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment