பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய்சேதுபதி கொடுத்தது எவ்வளவு?

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு திரையுலக பிரபலங்கள் உதவிகளை குவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ.50 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அதேபோல் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது பங்காக ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சூர்யா குடும்பத்தினர் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் 100 மூட்டைகள் அரிசி, நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டை வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.