ரஜினி-விஜய் திருமணங்களில் ஒரு அபூர்வ ஒற்றுமை
Tuesday, August 30, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு நடிகருக்கு நான்கு தலைமுறைகள் ரசிகர்களாக இருக்கின்றனர் என்றால் அதைவிட வேறு ஏதாவது ஒரு பெருமை வேண்டுமா? அத்தகைய பெருமையை பெற்றிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த 65 வயதிலும் அவர் நடித்த 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.800 கோடி வசூல் செய்து அவர் என்றைக்குமே சூப்பர் ஸ்டார்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
அதேபோல் ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் இளையதளபதி விஜய். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தெறி' அவருக்கு இருக்கும் திரையுலக மார்க்கெட்டை நிரூபித்தது.
இந்நிலையில் ரஜினியும் விஜய்யும் தன்னுடைய நடிப்பை நேசித்த ரசிகையை திருமணம் செய்துள்ளனர் என்பது ஒரு அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது. ரஜினியை பேட்டி எடுக்க வந்த அவருடைய தீவிர ரசிகையான லதா, பின்னர் காதலில் விழுந்து பின்னர் அவரையே தனது வாழ்க்கை துணைவராக ஏற்றுக்கொண்டார். அதேபோல் விஜய்யின் தீவிர ரசிகையான லண்டனை சேர்ந்த சங்கீதா, அவரை ரசிகை என்ற முறை நேரில் சந்தித்து பின்னர் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டனர். தங்களுடைய நடிப்பை நேசித்த ரசிகைகளை மணந்து கொண்ட இந்த இருபெரும் நடிகர்கள் தங்கள் இல்வாழ்விலும் ஒற்றுமையாக இருந்து தங்கள் உறவின் நெருக்கத்தை நிரூபித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments