அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? கொலையில் முடிந்த வாக்குவாதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பு நிதியாக ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பலர் தாராளமாக நிதியுதவி, பொருளுதவி செய்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் யார் அதிகமாக நிதி கொடுத்தது என்ற வாக்குவாதங்கள் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் விழுப்புரத்தில் அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? என்று இரு இளைஞர்களுக்கு இடையிலான வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், சந்திக்காப்பான் கோயில் தெருவை சேர்ந்த 22 வயது யுவராஜ் தீவிர விஜய் ரசிகர். இவரது வீட்டின் அருகில் இருக்கும் 22 வயது தினேஷ்பாபு என்பவர் தீவிர ரஜினி ரசிகர். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் நேற்று மாலை தினேஷ் பாபு மற்றும் யுவராஜ் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை அதிகமான நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரஜினி, விஜய் இவர்களில் யார் அதிக நிதி கொடுத்தார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது. விளையாட்டாக தொடங்கிய ஒரு கட்டத்தில் கைகலப்பு வரை சென்றதை அடுத்து திடீரென யுவராஜை தினேஷ்பாபு வேகமாக தள்ளியதாகவும், இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிகிறது
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தினேஷ்பாபுவை கைது செய்தனர். ரஜினி, விஜய் சர்ச்சையில் நண்பரையே கொலை செய்த தினேஷ்பாபுவால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments