அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? கொலையில் முடிந்த வாக்குவாதம்

கொரோனா தடுப்பு நிதியாக ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பலர் தாராளமாக நிதியுதவி, பொருளுதவி செய்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் யார் அதிகமாக நிதி கொடுத்தது என்ற வாக்குவாதங்கள் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் விழுப்புரத்தில் அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? என்று இரு இளைஞர்களுக்கு இடையிலான வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், சந்திக்காப்பான் கோயில் தெருவை சேர்ந்த 22 வயது யுவராஜ் தீவிர விஜய் ரசிகர். இவரது வீட்டின் அருகில் இருக்கும் 22 வயது தினேஷ்பாபு என்பவர் தீவிர ரஜினி ரசிகர். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் நேற்று மாலை தினேஷ் பாபு மற்றும் யுவராஜ் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை அதிகமான நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரஜினி, விஜய் இவர்களில் யார் அதிக நிதி கொடுத்தார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது. விளையாட்டாக தொடங்கிய ஒரு கட்டத்தில் கைகலப்பு வரை சென்றதை அடுத்து திடீரென யுவராஜை தினேஷ்பாபு வேகமாக தள்ளியதாகவும், இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிகிறது

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தினேஷ்பாபுவை கைது செய்தனர். ரஜினி, விஜய் சர்ச்சையில் நண்பரையே கொலை செய்த தினேஷ்பாபுவால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

சென்னையிலுள்ள அம்மா உணவகங்களில் இனிமேல் 3 வேளையும் இலவசமாகச் சாப்பிடலாம்!!!

கொரோனா முடியும் வரை சென்னையிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக சாப்பாடு வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இனி விஜய் 'தளபதி' இல்லை, 'தானதளபதி': பிரபல இயக்குனர்

அஜித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கொரோனா தடுப்பு நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் விஜய் இதுவரை எந்த நிதியுதவியும் செய்யவில்லை என நேற்று முன் தினம் வரை நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

நிர்வாண படம் அனுப்பிய மர்ம நபர்களுக்கு பதிலடி கொடுத்த பனிமலர்!

சமூக வலைத்தளங்களில் இருக்கும் பெரும்பாலானோர் ஆரோக்கியமான விவாதம் நடத்தாமல் அருவருப்பான வார்த்தைகள், புகைப்படங்கள், கமெண்ட்டுக்களை பதிவு செய்து சமூக வலைத்தளங்களையே

இன்று தமிழகத்தில் 54 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்! சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் சராசரியாக தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று 54 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சானிடைசர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் அல்லது சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்றும் அரசும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களிடம்