'தர்பார்' படப்பிடிப்பில் 'லதா ரஜினி': வைரலாக்கும் புகைப்படம்

  • IndiaGlitz, [Monday,September 30 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மும்பை, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பரில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே படப்பிடிப்புடன் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்தை காண அவரது மனைவி லதா ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று உள்ளார். போலீஸ் உடையில் இருக்கும் ரஜினிகாந்துடன் லதா இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது