ரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா?
- IndiaGlitz, [Monday,November 18 2019]
சமீபத்தில் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள கமலஹாசனையும், விரைவில் அரசியலில் களம்புகவுள்ள ரஜினிகாந்த் அவர்களையும் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே சமீபகாலமாக விமர்சனம் செய்து வருகின்றன. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் எதிரெதிர் கட்சிகள் என்றாலும் ரஜினி-கமலை எதிர்ப்பதில் இரண்டு கட்சிகளும் ஒற்றுமையுடன் உள்ளன
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் நேரடியாகவே விமர்சனம் செய்தார். அதேபோல் திமுகவில் உள்ள முன்னணி தலைவர்களும் கமல், ரஜினி ஆகீய இருவரையும் விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் இரண்டு திராவிட கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டு வரும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து, வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. அதனை நேற்று ’கமல்ஹாசன் 60’ விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களும் குறிப்பிட்டார்
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை ரஜினியும் கமலும் இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ரஜினி-கமல் தரப்பில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
எஸ்ஏ சந்திரசேகர் விருப்பப்படி ரஜினி, கமல் இணைந்து தேர்தலை சந்தித்தால், இந்த கூட்டணிக்கு விஜய் ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
கடந்த 50 வருடங்களாக அரசியல் செய்து வரும் இரண்டு திராவிட கட்சிகளை எதிர்க்க ஒரு வலிமையான கூட்டணி தேவை என்பதால் ரஜினி, கமல், விஜய் என மூவரும் இணைய வேண்டும் என்பதே இரு திமுக, அதிமுக கட்சிகளின் எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்