அரசியலில் ரஜினி-கமல் இணைந்தால் மாற்றம் வரும்: பிரபல நடிகர் விருப்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் மக்களவை தேர்தலில் கமல் மற்றும் விஜயகாந்த் கட்சிகள் கூட்டணி அமைத்து அந்த கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் கண்டிப்பாக இரு கழகங்களின் கூட்டணிகள் கலக்கம் அடையும் என ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஷாலும் வரும் மக்களவை தேர்தலில் கமல், ரஜினி இருவரும் இணைந்தால் நிச்சயம் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும் என தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கமல், ரஜினி இருவரும் நடிகர் சங்கத்திற்காகவோ, ஒரு திருமண நிகழ்ச்சிக்காகவோ, ஒரு மல்டி ஸ்டார் படத்திற்காகவோ இணையாவிட்டாலும் பரவாயில்லை, வரும் மக்களவை தேர்தலில் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்படி நடந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அரசியலில் இரண்டாம் ஆண்டு காலடி எடுத்து வைத்த கமலுக்கு ரஜினி நன்றி கூறியதும், ரஜினி போன்ற நல்லவர்கள் ஆதரவு தனக்கு தேவை என்று கமல் கூறியதும் தெரிந்ததே. எனவே கழகங்களில் இருந்து மக்களை காப்பாற்ற இருவரும் வரும் தேர்தல்களில் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
I wish Rajini sir and kamal sir come together. Not for Nadigar sangam show. Not for any star reception.Not for any multistarrer. Not for anythin but 2019 Loksabha. Yes. It will be a game changer.
— Vishal (@VishalKOfficial) February 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com