அரசியலில் ரஜினி-கமல் இணைந்தால் மாற்றம் வரும்: பிரபல நடிகர் விருப்பம்

  • IndiaGlitz, [Wednesday,February 27 2019]

வரும் மக்களவை தேர்தலில் கமல் மற்றும் விஜயகாந்த் கட்சிகள் கூட்டணி அமைத்து அந்த கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் கண்டிப்பாக இரு கழகங்களின் கூட்டணிகள் கலக்கம் அடையும் என ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஷாலும் வரும் மக்களவை தேர்தலில் கமல், ரஜினி இருவரும் இணைந்தால் நிச்சயம் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும் என தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கமல், ரஜினி இருவரும் நடிகர் சங்கத்திற்காகவோ, ஒரு திருமண நிகழ்ச்சிக்காகவோ, ஒரு மல்டி ஸ்டார் படத்திற்காகவோ இணையாவிட்டாலும் பரவாயில்லை, வரும் மக்களவை தேர்தலில் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்படி நடந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அரசியலில் இரண்டாம் ஆண்டு காலடி எடுத்து வைத்த கமலுக்கு ரஜினி நன்றி கூறியதும், ரஜினி போன்ற நல்லவர்கள் ஆதரவு தனக்கு தேவை என்று கமல் கூறியதும் தெரிந்ததே. எனவே கழகங்களில் இருந்து மக்களை காப்பாற்ற இருவரும் வரும் தேர்தல்களில் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜய்சேதுபதியை முந்திய சசிகுமார்-ராஜ்கிரண் கூட்டணி!

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' மற்றும் 'சீமராஜா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமானார். 

அதிமுகவுடன் கூட்டணி எதிரொலி: பாமகவில் இருந்து பிரபல நடிகர் விலகல்!

அதிமுகவை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சனம் செய்த பாமக, திடீரென 7 மக்களவை தொகுதிக்காகவும், ஒரு மாநிலங்களவை தொகுதிக்காகவும்

புல்வாமா மட்டுமின்றி காந்தகாருக்கும் சேர்த்து பழிதீர்த்த இந்தியா!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கியதோடு

அருண்விஜய்யின் 'தடம்' படத்தின் கச்சிதமான ரன்னிங் டைம்!

அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதலமைச்சர் கோப்பையை கைப்பற்றிய சுசீந்திரன் பட நடிகைகள்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'கென்னடி கிளப்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது