பழம்பெரும் நடிகரின் நூற்றாண்டு விழாவில் ரஜினி-கமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கமல்ஹாசன் 60’விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசிய சில கருத்துக்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. முதலமைச்சர் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் ரஜினியின் பேச்சு குறித்து விமர்சனமும் கண்டனமும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை மீண்டும் ஒரு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பழம்பெரும் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னையில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வில்லன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நடிகர் எம்.என்.நம்பியார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், உள்பட பல பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர். 60 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நம்பியார் கடந்த 2008-ஆம் ஆண்டு காலமானார்.
தற்போது நம்பியாரின் 100வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் அவரது நூற்றாண்டு விழா, சென்னை மியூசிக் அகாடமியில் நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, முன்னாள் டிஜிபியும் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் சிறப்பு ஆலோசகருமான விஜயகுமார் ஐபிஎஸ் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments