ரஜினி, கமல் அரசியல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே அதிகாரபூர்வமாக தங்கள் கட்சியின் பெயரை அடுத்த மாதம் அறிவித்துவிட்டு அரசியல் களத்தில் நேரடியாக குதிக்கவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதில் கமல்ஹாசன் பிப்ரவரி 21 என்று கட்சி தொடங்கும் தேதியை கூட அறிவித்துவிட்டார். மேலும் இருவருமே ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் அரசியல் குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், 'ரஜினி, கமல் இருவருமே அரசியல் கட்சி தொடங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். சமீபத்தில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், 'ரஜினி, கமல் இருவருமே அரசியல் கட்சி தொடங்க மாட்டார்கள் என்றும், பாஜகவுடன் ரஜினி உள்பட யார் கூட்டணி சேர்ந்தாலும் ஆர்.கே. நகரில் அந்த கட்சிக்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும் என்றும் இருவரும் இணைந்தால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதா கொடுத்த இன்னோவா கார், ஓபிஎஸ் பெயரில் இருந்ததால் அதை பயன்படுத்த தனக்கு உடன்பாடு இல்லை என்றும், அதனால் தான் அந்த காரை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.