காவிரி பிரச்சனைக்காக கைகோர்க்கும் ரஜினி-கமல்?

  • IndiaGlitz, [Thursday,April 05 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட கட்சிகளும், போராட்டத்தில் கலந்து கொள்ளாத அரசியல் தலைவர்களும் தமிழகத்தில் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு காவிரி விவகாரம் காட்டுத்தீ போல் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்த், காவிரி பிரச்சனைக்க்காக மத்திய அரசை எதிர்த்து எந்தவித போராட்டமும் நடத்தாமல் அமைதியாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து காவிரி பிரச்சனைக்காக விரைவில் ரஜினி தரப்பில் இருந்து ஒரு உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு வெளிவரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. நதிநீர் இணைப்புக்காக ஏற்கனவே ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சங்கம் சார்பில் வரும் 8ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அறவழி போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்திலும் ரஜினிகாந்த் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள போவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார் என்பதும், காவிரி பிரச்சனைக்காக முதன்முறையாக ரஜினி-கமல் கைகோர்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.