கமல்-ரஜினி விசிட்டில் பிரபுவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்
- IndiaGlitz, [Wednesday,December 28 2016]
இளையதிலகம் பிரபுவின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அன்னை இல்லம் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
ஒரு மனிதனுக்கு 60வது பிறந்த நாள் என்பது மிக முக்கியம் என்றாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் ஆகியவற்றை கருதி பிரபு இந்த பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவதை தவிர்த்தார்.
ஆனால் அவருக்கே தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் ஒருசிறு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, அவரது மனைவி உஜ்ஜயினி, பிரபுவின் மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் குணால் ஆகியோர் பிரபுவுக்கே தெரியாமல் இந்த சஸ்பென்ஸ் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவர்கள்தான் கமல் மற்றும் ரஜினியிடம் இந்த சர்ப்ரைஸ் விழா குறித்து தெரிவித்துள்ளனர்.
எளிமையாக நடந்த பிரபுவின் 60வது பிறந்த நாள் விழாவில் சிவாஜி குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் சுமார் 20 நிமிடங்கள் இருந்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் கமல்ஹாசன் சிவாஜி குடும்பத்தார்களுடன் மதிய உணவில் கலந்து கொண்டார்.