இலங்கை தொடர் வெடிகுண்டு சம்பவம்: பலியானவர்களுக்கு ரஜினி, கமல் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்களில் நேற்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் ஐவர் இந்தியர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்.
இந்த நிலையில் தீவிரவாதிகளின் இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு உலகமே கண்டனம் தெரிவித்து வருவதோடு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, "ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை" என தெரிவித்துள்ளார். அதேபோல் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், ''வன்முறை ஒருபோதும் மனித முரண் பாடுகளுக்கு இறுதி தீர்வு அல்ல. இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீதி வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சமற்ற மற்றும் விரைவாக வகையில் செயல்படும்படி இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
— Rajinikanth (@rajinikanth) April 21, 2019
Violence can never be the final solution to human disagreements. Ironic that the island that spawned the word serendipity is not able to find it. My deepest sympathies to those affected by the bombs in Srilanka. The government should be impartial and swift in rendering Justice.
— Kamal Haasan (@ikamalhaasan) April 21, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments