ரஜினி-கமல் எனது நண்பர்கள் இல்லை! பிரபல நடிகர் பேட்டி
- IndiaGlitz, [Sunday,January 13 2019]
ரஜினிகாந்த், கமல்ஹாசன் தனது சக நடிகர்கள் மட்டுமே என்றும், நண்பர்கள் இல்லை என நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையின் ஒரு பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சரத்குமார், செய்தியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் கூறியபோது, 'எனக்கு திரையுலகில் ஒருசில நண்பர்கள் மட்டுமே இருக்கின்றனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் என்னுடைய சக நடிகர்கள் மட்டுமே' என்று கூறினார்.
மேலும் கமல், ரஜினி ஆகிய இருவருடனும் வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்றும், விஜயகாந்த் விரும்பினால் அவரது கட்சியுடன் கூட்டணி வைக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை' என்றும் கூறியுள்ளார்.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதை கட்சியின் தலைமை மற்றும் உயர்மட்ட குழு உறுதி செய்யும் என்றும், கட்சி விரும்பினால் நான் போட்டியிட தயார் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.