close
Choose your channels

ரஜினி, தனுஷ் படங்கள் ஒரே நாளில் ரிலீஸா?

Friday, November 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டு படங்களும் வெற்றி பெறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. கடந்த பொங்கல் தினத்தில் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களும், கடந்த தீபாவளி தினத்தில் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி திரைப்படங்களும் வெளியாகி வெற்றி பெற்றன. அந்த வகையில் தற்போது ரஜினி மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் பட்டாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் இந்த படம் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் பட்டாஸ் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படமும் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் ஒருவேளை இரண்டு படங்களும் பொங்கல் திரைப்படமாக வெளியாவது உறுதி செய்யப்பட்டால் ரஜினியின் தர்பார் படம் ஜனவரி 10ஆம் தேதியும், தனுஷின் பட்டாஸ் படம் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment