அமெரிக்காவில் ரஜினி-தனுஷ்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,December 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர்களுடன் ஓய்வு எடுக்க சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் மீண்டும் ஜனவரி முதல் வாரத்தில் நாடு திரும்புவார் என்றும், அதன்பின் பொங்கல் தினத்தில் வெளியாகும் 'பேட்ட' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வலம் வந்த நிலையில் இன்று ரஜினியும் தனுஷூம் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷின் தோள் மீது ரஜினி கைபோட்டு இருவரும் புன்சிரிப்புடன் உள்ள இந்த புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைத்தளங்களின் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.