ரஜினி-முருகதாஸ் படத்தின் மெகா திட்டம்

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்தது. இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் அனைவரும் லாபம் பெற்று மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 120 நாட்கள் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தை 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டை போலவே அடுத்த ஆண்டும் ரஜினி ரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.