ரஜினி, அஜித், விஜய் பட நடிகரின் வாட்ஸ்அப் எண் முடக்கம்.. 61 மணி நேரத்தில் 9483 மெசேஜ்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகரின் வாட்ஸ்அப் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென முடக்கப்பட்ட நிலையில் அவருக்கு 9483 மெசேஜ்கள் வந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ விஜய் நடித்த ’நெஞ்சினிலே’ அஜித் நடித்த ’ராஜா’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்த சோனு சூட். அதுமட்டுமின்றி இவர் கொரோனா காலங்களில் ஏராளமான உதவிகளை பொதுமக்களுக்கு செய்து உள்ளார் என்பதும் திரையில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் இவர் ஒரு ஹீரோவாக மக்களால் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் தன்னுடைய வாட்ஸ்அப் கணக்கு முடங்கி விட்டதாகவும் இதனால் தனக்கு ஏராளமான மெசேஜ்கள் வரவில்லை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். மேலும் தன்னிடம் உதவி கேட்க விரும்புபவர்கள் நேரடியாக போன் செய்து கேட்கலாம் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய வாட்ஸ்அப் கணக்கு ஒரு வழியாக மீண்டு விட்டது என்றும் கடந்த 61 மணி நேரத்தில் 9483 மெசேஜ்கள் வந்துள்ளதாகவும் வாட்ஸ்அப் கணக்கை மீட்க உதவிய தொழில்நுட்ப குழுவினர்களுக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments