அறிமுக தயாரிப்பாளருக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்

  • IndiaGlitz, [Tuesday,September 15 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கடந்த 24 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த ஜெயராமன், கோலிவுட்டில் 'ரஜினி ஜெயராமன்' என்றே அழைக்கப்படுகிறார். தற்போது 'கிருமி' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். 'மதயானைக்கூட்டம்' பட நாயகன் கதிர் மற்றும் ரேஷ்மி மேனன் நடிக்கும் இந்த படத்தை அனுசரண் இயக்கிவருகிறார். சைக்காலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் கதையை 'காக்கா முட்டை' மணிகண்டன் எழுதியுள்ளார்.


தனது முதல் தயாரிப்பு அனுபவம் குறித்து ஜெயராமன் கூறியபோது, 'நான் தயாரிப்பாளராக முடிவு செய்தவுடன் ரஜினி சாரை சந்தித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் நல்ல ஸ்கிரிப்டை தேர்வு செய்யுமாறும், தயாரிப்பில் ஈடுபடும்போது பணத்தை கவனமாக செலவு செய்யும்படி அறிவுரை கூறினார். அவருடைய அறிவுரையை பின்பற்றி இந்த படத்தை தயாரித்துள்ளேன்.

மேலும் ரஜினி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலமின்றி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அதே நேரத்தில் நானும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இதைக்கேள்விப்பட்ட ரஜினி, சென்னை வந்தவுடன் தன்னை சந்திக்க அழைத்தார். நான் அவரை நேரில் சந்தித்த இருவருக்குமே பேச்சு வரவில்லை. என்னை கட்டிப்பிடித்து கொண்டு கண்ணீர் விட்டார்' என்று தன்னுடைய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றையும் ஜெயராமன் நினைவு கூர்ந்தார்.

More News

திரையரங்குக்குக் குழந்தைகளோடு வராதீர்கள். மிஷ்கின்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பி.வாசு. இவருடைய மகன் சக்தி நடித்த தற்காப்பு...

சென்னை மருத்துவமனையில் நடிகர் நாசர்?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷால் அணியின் சார்பில் நடிகர் சங்க தலைவர் ...

உண்மை இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். சிம்பு ஆவேசம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலை ஒட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராதிகா சரத்குமார், சரத்குமார் ஆகியோர் விஷால் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்...

வாடகை வீட்டில் கஷ்டப்படும் நடிகர் கிஷோர்

கோலிவுட் திரையுலகில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் கிஷோர், நாயகனாக நடித்து வரும் படம் 'கடிகார மனிதர்கள்'...

'புலி'யுடன் 'பாகுபலி'யை ஒப்பிட வேண்டாம். நட்டி நட்ராஜ்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து படம் சென்சாருக்கு செல்வதற்கு தயார்...