அறிமுக தயாரிப்பாளருக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கடந்த 24 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த ஜெயராமன், கோலிவுட்டில் 'ரஜினி ஜெயராமன்' என்றே அழைக்கப்படுகிறார். தற்போது 'கிருமி' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். 'மதயானைக்கூட்டம்' பட நாயகன் கதிர் மற்றும் ரேஷ்மி மேனன் நடிக்கும் இந்த படத்தை அனுசரண் இயக்கிவருகிறார். சைக்காலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் கதையை 'காக்கா முட்டை' மணிகண்டன் எழுதியுள்ளார்.
தனது முதல் தயாரிப்பு அனுபவம் குறித்து ஜெயராமன் கூறியபோது, 'நான் தயாரிப்பாளராக முடிவு செய்தவுடன் ரஜினி சாரை சந்தித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் நல்ல ஸ்கிரிப்டை தேர்வு செய்யுமாறும், தயாரிப்பில் ஈடுபடும்போது பணத்தை கவனமாக செலவு செய்யும்படி அறிவுரை கூறினார். அவருடைய அறிவுரையை பின்பற்றி இந்த படத்தை தயாரித்துள்ளேன்.
மேலும் ரஜினி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலமின்றி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அதே நேரத்தில் நானும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இதைக்கேள்விப்பட்ட ரஜினி, சென்னை வந்தவுடன் தன்னை சந்திக்க அழைத்தார். நான் அவரை நேரில் சந்தித்த இருவருக்குமே பேச்சு வரவில்லை. என்னை கட்டிப்பிடித்து கொண்டு கண்ணீர் விட்டார்' என்று தன்னுடைய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றையும் ஜெயராமன் நினைவு கூர்ந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com