close
Choose your channels

ரஜினிகாந்த்-சிறுத்தை சிவா படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Friday, October 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் சிவா, ரஜினியின் போயஸ் தோட்டம் இல்லம் சென்று அவரை சந்தித்து, இந்த படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து ரஜினி, சிவா இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் இந்த படத்தை கோலிவுட்டின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வந்தன

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168 வது படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இருந்த நிலையில் அவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மட்டுமன்றி இந்த படத்தை பிரமாண்டமான நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் எந்திரன் மட்டும் பேட்ட ஆகிய இரண்டு வெற்றி படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment