ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம்: திடீரென களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

காவிரி, ஸ்டெர்லைட் போராட்டங்கள் தமிழகத்தில் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டங்களை திசைதிருப்பும் வகையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஒருசில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்துவது சரியானதல்ல என்று கூறியிருந்தார். அப்படியே நடத்தினாலும் சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், பார்வையாளர்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு உடையும் அணியலாம் என்று அவர் ஆலோசனை கூறியிருந்தார். ஆனால் ரஜினியின் இந்த ஆலோசனையை ஐபிஎல் நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் சற்றும்முன் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாலஜா சாலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஐபிஎல் போட்டி எதிரொலி: கடற்கரை சாலை- வாலாஜா சாலை போக்குவரத்து திடீர் நிறுத்தம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி இன்னும் ஒருசில மணி நேரங்களில் ஆரம்பமாகவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னையில் சிஎஸ்கே போட்டி: கட்டுப்பாட்டிற்கு திடீர் தளர்வு

சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போட்டிக்கு வரும் பார்வையாளர்களுக்கு நேற்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

காவிரிக்காக ஒன்று சேர்ந்த அஜித்-விஜய் ரசிகர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகின்றனர்.

விஜய் எப்பொழுது அரசியலில் ஈடுபடுவார் ? எஸ்.ஏ.சி

தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் சமூக  வலைத்தளங்கள் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு தந்தையாக விஜய் அரசியலுக்கு வரவேண்டும்

'இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது: சிஎஸ்கே வீரரின் தமிழ் டுவீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துவிட்டாலே தன்னாலே தமிழ் உணர்வும், தமிழ் டுவீட்டும் வீரர்களிடையே வந்துவிடும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்