ஆஹா! என்ன ஒரு காவியம்.. கமல் படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரஜினி.. அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்கள் நடித்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ஆச்சரியமடைந்து இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங் என தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’. இந்த படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று உள்ளது என்பதும் இரண்டே நாட்களில் இந்த படம் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்த் ’கல்கி 2898 ஏடி’ படத்தை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:
கல்கி படத்தை பார்த்தேன், ஆஹா என்ன ஒரு காவியம், இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டார், என் அன்பு நண்பர் தயாரிப்பாளர் அஸ்வினி தத், அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் கல்கி படத்தின் குழுவில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வெயிட்டிங், கடவுள் ஆசீர்வதிப்பாராக’ என்று பதிவு செய்துள்ளார். ரஜினியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Watched Kalki. WOW! What an epic movie! Director @nagashwin7 has taken Indian Cinema to a different level. Hearty congratulations to my dear friend @AswiniDutt @SrBachchan @PrabhasRaju @ikamalhaasan @deepikapadukone and the team of #Kalki2898AD. Eagerly awaiting Part2.God Bless.
— Rajinikanth (@rajinikanth) June 29, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com