இமயமலை செல்லும் முன் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினிகாந்த்: வீடியோ வைரல்..

  • IndiaGlitz, [Wednesday,August 09 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று அவர் இமயமலை கிளம்பி சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இமயமலைக்கு செல்வதற்கு முன் இவர் சிவகார்த்திகேயனுடன் போனில் பேசியதாகவும் ’மாவீரன்’ படம் பார்த்து பாராட்டு தெரிவித்ததாகவும் தெரிகிறது.

இது குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில் ’மாவீரன்’ திரைப்படம் 25 நாட்களை கடந்துள்ளது. இதற்கு காரணமான அனைவருக்கும் எனது நன்றி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’மாவீரன்’ படம் பார்த்து எனக்கு போன் செய்து வாழ்த்தினார். எங்களுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அவரது வாழ்த்து எங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தருணம்.

‘ஜெயிலர்’ பட வேலைகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி ’மாவீரன்’ படம் பார்த்தது எனக்கு மட்டுமின்றி என் குழுவில் இருக்கும் எல்லோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட் என்று சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் உங்கள் ரசிகன் என்பதை எப்போதும் செல்வேன், உங்களை பார்த்து தான் நான் சினிமாவிற்கே வந்தேன். உங்களுக்கு பேனர் வைத்து கொண்டாடிய நான் உங்கள் படம் பார்த்து வாழ்த்துவது என் வாழ்நாள் சாதனை. ’மாவீரன்’ படம் உங்கள் சரித்திரத்தில் இன்னொரு சிறப்பான படமாக இருக்கும். உங்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்குகிறேன் என்று சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.